Shanmugan Murugavel / 2025 நவம்பர் 12 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், சியல்ஹெட்டில் செவ்வாய்க்கிழமை (11) ஆரம்பித்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
போல் ஸ்டேர்லிங்க் 60, கடே கர்மிஷெல் 59, கேர்ட்டிஸ் கம்பர் 44, லொர்கன் டக்கர் 41, பர் மக்கார்தி 31, ஜோர்டான் நீல் 30 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், மெஹிடி ஹஸன் மிராஸ் 3, ஹஸன் மஹ்மூட், தஜியுல் இஸ்லாம், ஹஸன் முராட் ஆகியோர் தலா 2 மற்றும் நஹிட் ரானா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .