Shanmugan Murugavel / 2022 டிசெம்பர் 27 , பி.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துகிறது.
மெல்பேணில் நேற்று ஆரம்பித்த இப்போட்டியின் இன்றைய இரண்டாம் நாளை தமது முதலாவது இனிங்ஸில் ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த அவுஸ்திரேலியா, சிறிது நேரத்திலேயே ரண் அவுட் மூலம் மர்னுஸ் லபுஷைனை இழந்தது.
பின்னர் டேவிட் வோர்னருடன் இணைந்த ஸ்டீவ் ஸ்மித் இனிங்ஸை நகர்த்திச் சென்ற நிலையில் 85 ஓட்டங்களுடன் அன்றிச் நொர்கியாவிடம் ஸ்மித் வீழ்ந்ததோடு, 200 ஓட்டங்களுடன் வோர்னரும், தொடர்ந்து கமரொன் கிறீனும் றிட்டயர்ட் ஹேர்ட் முறையில் களத்திலிருந்து வெளியேறிய நிலையில், இன்றைய இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 386 ஓட்டங்களைப் பெற்று தென்னாபிரிக்காவின் முதலாவது இனிங்ஸை விட 197 ஓட்டங்கள் முன்னிலையில் அவுஸ்திரேலியா உள்ளது.
தற்போது களத்தில் ட்ரெவிஸ் ஹெட் 48 ஓட்டங்களுடனும், அலெக்ஸ் காரி ஒன்பது ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமலுள்ளனர்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: அவுஸ்திரேலியா
தென்னாபிரிக்கா: 189/10 (துடுப்பாட்டம்: மார்கோ ஜன்சன் 59, கைல் வெரைன் 52 ஓட்டங்கள். பந்துவீச்சு: கமரொன் கிறீன் 5/27, மிற்செல் ஸ்டார்க் 2/39, ஸ்கொட் போலண்ட் 1/34, நேதன் லையன் 1/53)
அவுஸ்திரேலியா: 386/3 (துடுப்பாட்டம்: டேவிட் வோர்னர் 200, ஸ்டீவ் ஸ்மித் 85, ட்ரெவிஸ் ஹெட் ஆ.இ 48 ஓட்டங்கள். பந்துவீச்சு: அன்றிச் நொர்கியா 1/50, ககிஸோ றபாடா 1/94)
6 minute ago
13 minute ago
48 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
48 minute ago
59 minute ago