2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

2ஆவது டெஸ்டில் இலங்கை நிதானமான ஆரம்பம்

Shanmugan Murugavel   / 2021 நவம்பர் 29 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை நிதானமான ஆரம்பத்தைப் பெற்றுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் இன்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையின் அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தமதணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.

இலங்கை சார்பாக கடந்த போட்டியில் விளையாடிய துஷ்மந்த சமீரவை பிரதியிட்ட சரித் அஸலங்க டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக ஷனொன் கப்ரியல், ரஹீம் கொர்ன்வோலை கேமார் றோச், வீராசாமி பெருமாள் ஆகியோர் பிரதியிட்டிருந்தனர்.

இந்நிலையில், மழை காரணமாக தேநீர் இடைவேளையின் பின்னர் ஆரம்பித்த இப்போட்டியில் இன்றைய முதல் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ஓட்டங்களை தமது முதலாவது இனிங்ஸில் இலங்கை பெற்றுள்ளது. தற்போது களத்தில், பதும் நிஸங்க 61, ஒஷாத பெர்ணான்டோ 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க்காதுள்ளனர். கருணாரத்ன 42 ஓட்டங்களுடன் றொஸ்டன் சேஸிடம் வீழ்ந்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .