2025 மே 20, செவ்வாய்க்கிழமை

62 ஓட்டங்களுக்கு சுருண்டது நியூசிலாந்து

Freelancer   / 2021 டிசெம்பர் 04 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிராக மும்பையில் இடம்பெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 62 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

நியூசிலாந்து துடுப்பாட்டத்தில் கைல் ஜெமீசன் 17, டொம் லதம் 10 ஓட்டங்களையும் பந்து வீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 4, மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா சகல விக்கெட்டுகளையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் மயங் அகர்வால் 150, அக்ஷார் பட்டேல் 52 ஓட்டங்களைப் பெற்றதுடன், நியூசிலாந்தின் அஜாஸ் பட்டேல் 119 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3ஆவது வீரராக அஜாஸ் பட்டேல்  உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X