Editorial / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 01:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

84 வயதில் பளு தூக்கி அசத்தும் தாத்தா - "மரணத்தில் நம்பிக்கையில்லை" என்கிறார். இந்த வயதிலும் வாரம் ஆறு நாள் என, தினமும் 2 - 3 மணி நேரம் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்கிறார் கட்டுக் கோப்பான உடலைக் கொண்ட தாத்தா.
பிரையனுக்கு 84 வயதாகிறது. அவர் பளுத்தூக்குவது கட்டாயம் ஓர் ஆர்வம் என்றும் தெரிவித்துள்ளார். வாழ்வின் பெரும் பகுதியை பளுத்தூக்கி கழித்துள்ள அவர், குழந்தைகள் பேரக்குழந்தைகள் இசை, உடற்பயிற்சி இவையே வாழ்வின் பொக்கிஷங்கள் என்றும் அறிவித்துள்ளார்.
“வாரத்துக்கு ஆறு நாள் ஜிம்முக்கு போவேன், தினமும் 2 மணிநேரம் பயிற்சியில் ஈடுபடுவேன், சில வேளைகளில் 3 மணிநேரம் பயிற்சி செய்வேன். அது இல்லாமல் என்னால் இருக்கமுடியாது” என்றும் கூறியுள்ளார்.
இங்கிலாந்து தெற்கு டெவன் கவுன்டியில் டெக்சேர் உதவியாளராக இருந்தபோது பளுத்தூக்கும் ஆர்வம் தன்னை தொற்றிக்கொண்டது எனத் தெரிவித்த அவர், எத்தனை டெக்சேர் நாற்காலிகளை ஒன்றாக தூக்கமுடியும் என பார்ப்பேன். 06 அல்லது அதற்கு மேல் உயரமாக தூக்கிப்பார்ப்பேன் என்கிறார்.
20ஆவது வயதில் இப்படி இருந்தேன் என தனது புகைப்படத்தை வீடியோவுக்கு காண்பித்துள்ள அவர், “நான், இப்போதும் அதே ஆள்தான், ஆனால் யார் நம்புவார்கள்?”
சர்வதேச பளுத்தூக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். பிரையன், 80 + அடுத்த ஆண்டு நடக்கபோகிறது. அதில் பங்கேற்பதற்கு அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
“அங்கே, என்னை யாரும் வெல்லும் வாய்ப்பு குறைவு என தெரிவித்துள்ள அவர், என்னுடன் போட்டிப்போட்டி யாரும் வென்றால் அது தனக்கு ஆச்சரியம் என்றும் கூறியுள்ளார். “புத்த நெறியில் செல்லும் தனக்கு மரணம் என்பதில் நம்பிக்கை இல்லை” என்றும் தெரிவித்துள்ளார். (நன்றி: பி.பி.சி)
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026