Editorial / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

கரீபியன் பிறீமியர் லீக் தொடரின் இறுதிச் சுற்றுக்கு, சென். கிற்ஸ் மற்றும் நெவிஸ் பட்ரியட்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது. ஜமைக்கா தலவாஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றே, தமது இடத்தை, பட்ரியட்ஸ் அணி உறுதிப்படுத்தியது.
நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தலவாஸ் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பட்ரியட்ஸ் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களைக் குவித்தது. முதலாவது விக்கெட்டுக்காக, 12.3 ஓவர்களில் 110 ஓட்டங்களைக் குவித்த அவ்வணி, இறுதி 21 பந்துகளில் 57 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
துடுப்பாட்டத்தில் கிறிஸ் கெயில் 71 (55), எவின் லூயிஸ் 69 (39), மொஹமட் நபி 29 (12), கார்லொஸ் பிறெத்வெய்ட் 26 (13) ஓட்டங்களைக் குவித்தனர்.
209 ஓட்டங்கள் என்ற, சவாலான வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தலவாஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 37 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
முதலாவது விக்கெட்டுக்காக 64 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும், அதற்கு 8.5 ஓவர்கள் எடுத்துக் கொண்டது. அதன் பின்னர், அடித்தாட வேண்டிய சூழ்நிலையில், விக்கெட்டுகள் தொடர்ச்சியாக விழ, தேவையான இலக்கை அடைய முடிந்திருக்கவில்லை.
துடுப்பாட்டத்தில் ட்ரெவன் கிரிபித் 42 (32), றொன்வன் பவல் 31 (19), கிளென் ஃபிலிப்ஸ் 31 (27) ஓட்டங்களைப் பெற்றனர்.
பந்துவீச்சில் தப்ராஸ் ஷம்ஸி, 3 விக்கெட்டுகளைப் பெற்றார்.
இப்போட்டியின் நாயகனாக, எவின் லூயிஸ் தெரிவானார்.
36 minute ago
42 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
42 minute ago
58 minute ago
1 hours ago