2025 ஜூலை 31, வியாழக்கிழமை

FIFA தலைவர் வந்தடைந்தார்

Editorial   / 2021 நவம்பர் 19 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கால்பந்து (FIFA) சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜய செய்துள்ள  அவரை,  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து,   இலங்கை வெளிவிவகார அமைச்சு, விளையாட்டு அமைச்சு மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகள் வரவேற்றனர்.

(FIFA) சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோவுடன் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின்   உயர் அதிகாரிகள் ஐவரும்  நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இலங்கையில் நடைபெறும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தேசிய கால்பந்தாட்ட கிண்ணப போட்டியின் இறுதிப் போட்டியில்  விசேட அதிதியாக அவர்  பங்கேற்பார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .