இதன்படி, இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படும் மூன்றாவது இலங்கை வீரராக மஹேல ஜயவர்தன விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Editorial / 2021 நவம்பர் 14 , பி.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிரிக்கெட் விளையாட்டின் சிரேஷ்ட வீரர்களை உள்ளடக்கிய ICC Hall of Fame பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன உள்வாங்கப்பட்டுள்ளார்.
அவருக்கான அங்கிகாரம், டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இன்று (14) வழங்கப்பட்டது. ICC ஹால் ஆஃப் ஃபேம் நினைவு தொப்பியை சர் கிளைவ் லாய்டிடமிருந்து மஹேல ஜயவர்தன பெற்றார்.
மஹேல ஜயவர்தனவிற்கு மேலதிகமாக, தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஷேன் போலொக் மற்றும் இங்கிலாந்து அணி வீராங்கனையான ஜெனெட் பிரிட்டின் ஆகியோரும் ICC Hall of Fame பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த பட்டியல் 2009 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படுகின்றது.
ICC Hall of Fame பட்டியலில் 2016 ஆம் ஆண்டு முத்தையா முரளிதரன் மற்றும் 2021 ஆம் ஆண்டு குமார் சங்ககாரவும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்படி, இந்த பட்டியலில் இணைத்துக்கொள்ளப்படும் மூன்றாவது இலங்கை வீரராக மஹேல ஜயவர்தன விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
32 minute ago
48 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
48 minute ago
9 hours ago