2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ODI தொடர் இன்று ஆரம்பிக்கிறது

Shanmugan Murugavel   / 2023 ஜனவரி 27 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரானது, புளூம்பொன்டெய்னில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

நீண்ட காலத்துக்குப் பின்னர் குழாமில் ஜொஃப்ரா ஆர்ச்சர் இத்தொடரில் இடம்பெற்றுள்ள அவர் இத்தொடரை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவரது பெறுபேறுகளைத் தவிர அவரது உடற்றகுதியே நிச்சயம் கவனிக்கப்படும்.

இந்நிலையில், ஜொனி பெயார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் உள்ளிடோரில்லாத நிலையில் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட டேவிட் மலன், ஹரி பரூக், பென் டக்கெட் ஆகியோரை சோதித்துப் பார்ப்பதற்கான சிறந்த களமாக இத்தொடர் காணப்படுகின்றது.

இவ்வாண்டு உலகக் கிண்ணத்துக்கு அணியை உறுதி செய்ய வேண்டியுள்ள நிலையில், ககிஸோ றபாடா, சிஸன்டா மகலா உள்ளிட்டோரின் பெறுபேறுகள் அவதானிக்கப்படுவதோடும், அணித்தலைவர் தெம்பா பவுமா ஓட்டங்களைக் குவித்து தன்னை நிலை நிறுத்த வேண்டியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X