Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2022 ஒக்டோபர் 28 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெற்கிலிருந்து வடக்கே 600 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 24 மணி நேர சைக்கிளோட்டப் போட்டியின் ஐந்தாவது சுற்று 'Race the Pearl’ 2022 நவம்பர் 5, தென் மாகாணத்தில் உள்ள தேவேந்திர முனையிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
ஆறு சிறந்த சைக்கிள் ஓட்டுநர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், பிரிட்டனைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் இரண்டு இலங்கையர்கள் 'Race the Pearl' போட்டியை வழிநடத்துவார்கள். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் இந்த சைக்கிளோட்டப் போட்டியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவேந்திர முனையில் ஆரம்பமாகி வடக்கில் பருத்தித்துரையை அடையவுள்ளதுடன், இது ஐந்து சுற்றுக்களைக் கொண்டுள்ளது. முதற்கட்டமாக தேவேந்திர முனை முதல் வெல்லவாய வரையிலான 145 கிலோமீற்றர் தூரமும், இரண்டாம் கட்டமாக வெல்லவாய முதல் மஹியங்கனை வரையிலான 116 கிலோமீற்றர் தூரமும் இந்த சைக்கிளோட்டப் போட்டி இடம்பெறவுள்ளது.
மூன்றாம் கட்டமானது மஹியங்கனையிலிருந்து தம்புள்ளை வரையிலான 92 கிலோமீற்றர்களை உள்ளடக்கியது மற்றும் அனைத்து சுற்றுக்களும் மிகக் குறுகியதாகும். தம்புள்ளையில் இருந்து ஆரம்பமாகி வவுனியாவில் முடிவடையும் நான்காம் கட்டத்தின் தூரம் 106 கிலோமீற்றர்களாகவும், கடைசி கட்டம் வவுனியா மற்றும் பருத்தித்துறைக்கு இடையில் 142 கிலோமீற்றர்களாகவும் உள்ளது.
'Race the Pearl', இலங்கையில் தீவிரமான சைக்கிளோட்ட போட்டியானது, வரவிருக்கும் RAAM (Race Across America)க்கான தகுதி காண் போட்டியாக கருதப்படுகிறது. RAAM என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டியாகும், இது அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை வரை 4,800 கிலோமீட்டர்களுக்கு அதிகமான தூரத்தை உள்ளடக்கியதாகும்.
‘Race the Pearl’ சைக்கிளோட்ட பணிப்பாளம் மற்றும் ஏற்பாட்டாளர் யசஸ் ஹேவகே கூறுகையில், அமெரிக்காவின் ஆறு முக்கிய சைக்கிள் ஓட்டப் போட்டியாளர்களில் ஒருவரும் இரண்டு இலங்கையர்களும் மூன்று பிரித்தானியர்களும் RAAM க்கு தகுதிபெறும் நோக்கத்துடன் ஆரம்பம் முதல் இறுதி வரை மிகுந்த ஆர்வத்துடன் தொடர்ந்து போட்டியிடவுள்ளனர்.
"50 அல்லது அதற்கு மேற்பட்ட சைக்கிள் ஓட்டப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுற்றுகளுக்கு மாத்திரம் பங்குபற்றுவதற்காக 'Race the Pearl' இல் இணைகின்றனர். அவர்கள் 24 மணிநேரமும் சுற்றுக்களிலும் வெவ்வேறு குழுக்களிலும் அல்லது தனிநபர்களாகவும் போட்டியிடுகிறார்கள்.” என ஹேவகேதெரிவித்தார்.
போட்டி இடம்பெறவுள்ள நாளுக்கு முன்னதாக பதிவுசெய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவருக்கும் White Rider ஜெர்சியை அமைப்பாளர்கள் வழங்குவார்கள். மேலும், 30-மணிநேர நேர எல்லைக்குள் முடிவுக் கோட்டைத் தாண்டுபவர்கள் ஃபினிஷரின் டி-சர்ட்டைப் பெறுவார்கள் மற்றும் ஓட்டப் போட்டி நேரத்திற்குள் (24 மணிநேரம்) ஃபினிஷ் லைனை அடையும் அனைத்து போட்டியாளர்களும் கிரிட் பதக்கத்தைப் பெறுவார்கள். 24 மணி நேர தனி மற்றும் 24 மணி நேர குழு போட்டிகளை முடிக்கும் வீரர்கள் மதிப்புமிக்க பேர்ல் ஜெர்சியை வெல்வதற்கு தகுதி பெறுகின்றனர், இது அமைப்பாளர்களால் இறுதி வெற்றியாக கருதப்படுகிறது.
இந்த போட்டியின் போது, ஆனையிறவு, லக்கல போன்ற உயரமான பகுதிகள், வெயில் மற்றும் மழை மற்றும் வீதியில் எதிர்பாராத விதமாக யானை வருகைகள் போன்ற பல்வேறு சம்பவங்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 'Race the Pearl' சைக்கிளோட்டப் போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள், தீவைச் சுற்றியுள்ள இயற்கை அழகை அனுபவிக்கவும், மறக்க முடியாத அனுபவத்தைப் பெறவும் முடியும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
9 hours ago