Shanmugan Murugavel / 2016 ஜனவரி 25 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பின் மிகப்பெரிய அனுசரணையாளரான அடிடாஸ், தனது அனுசரணையை, நான்கு வருடங்களுக்கு முன்பதாகவே முடித்துக் கொள்வதாக தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்புக்கு தெரிவித்துள்ளது.
விளையாட்டு அணித் தயாரிப்பு ஜாம்பவானான அடிடாஸ், தனது முடிவை தடகளச் சம்மேளனங்களின் கூட்டமைப்புக்கு அறிவித்துள்ளமையானது, கடந்த தடகள உலகை ஆட்டிப்படைத்த ஊக்கமருந்து நெருக்கடியின் விளைவே என கருதப்படுகிறது.
மேற்படி முடிவின் காரணமாக, மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்கள் வருமானத்தை தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பு இழக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்பின் தலைவர் லோர்ட் கோவுக்கு பலத்த தலையிடியாகவும் அமையவுள்ளது.
ரஷ்யாவில் அரச அனுசரணையுடன் ஊக்கமருந்து பயன்படுத்துதல் என்ற தகவல்கள் வெளியாகியமையையடுத்து, கடந்த நவம்பர் மாத ஆரம்பத்திலேயே, தமது அனுசரணையை முறித்துக் கொள்வது தொடர்பில் கவனமெடுத்துள்ளதாக அடிடாஸ், தடகளச் சம்மேளனங்களின் சர்வதேசக் கூட்டமைப்புக்கு அறிவித்த்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago