Shanmugan Murugavel / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணியின் பணிப்பாளராக, அவ்வணியின் முன்னாள் வீரராக ரவி ஷாஸ்திரி, அடுத்தாண்டு இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடர்வரை நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ரவி ஷாஸ்திரியின் பணி தவிர, உதவிப் பயிற்றுநர்களான சஞ்சய் பங்கர், பி. அருண், ஆர். ஸ்ரீதர் ஆகியோரின் பணிகளும், 2016ஆம் ஆண்டு ஏப்ரலில் இடம்பெறவுள்ள இத்தொடர்வரை நீடிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முன்னாள் தலைவரான சச்சின் டென்டுல்கர், சௌரவ் கங்குலி, முன்னாள் வீரரான வி.வி.எஸ் லக்ஷ்மன், சபையின் தலைவர் ஜக்மோகன் டால்மியா, செயலாளர் அநுரக் தாக்கூர் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு மேற்கொண்ட பரிந்துரையையடுத்தே, இப்பணி நீடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய அணிக்குப் பயிற்றுநர் என்றொருவர் தனியாக இல்லாத நிலையில், அணியின் பணிப்பாளராக நீடிக்கும் ரவி ஷாஸ்திரி, அவ்வணியின் தலைமைப் பயிற்றுநர் போன்றும் செயற்பட வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
47 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
7 hours ago