2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அதிவேகமாக 400 விக்கெட் - ரஷித் கான் சாதனை

J.A. George   / 2021 நவம்பர் 08 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்-12 சுற்றின் நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலை ஆட்டமிழக்க செய்தார்.

இது சர்வதேசம், உள்ளூர், லீக் உள்பட ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் ரஷித் கானின் 400-வது விக்கெட்டாக (289 ஆட்டம்) அமைந்தது. 

இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய 4-வது வீரர் என்ற சிறப்பை 23 வயதான ரஷித் கான் பெற்றார்.

டி20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் முதல் 3 இடங்களில்  வெயின் பிராவோ (553 விக்கெட்), சுனில் நரைன் (425 விக்கெட்), இம்ரான் தாஹிர் (420 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .