Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 22 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சம்பியன்ஸ் லீக்கில், தமது மைதானத்தில் புதன்கிழமை (22) நடைபெற்ற ஸ்பானிய லா லிகா கழகமான அத்லெட்டிகோ மட்ரிட்டுடனான போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான ஆர்சனல் வென்றது.
ஆர்சனல் சார்பாக விக்டர் ஜோக்கரிஷ் இரண்டு கோல்களையும், கப்ரியல் மற்றும் கப்ரியல் மார்டினெல்லி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர்.
இதேவேளை ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பயெர் லெவர்குசனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் 7-2 என்ற கோல் கணக்கில் வென்றது. பரிஸ் ஸா ஜெர்மைன் சார்பாக டிசையர் டுவே இரண்டு கோல்களையும், வில்லியன் பச்சோ, கிவிசா காவச்செலியா, நுனே மென்டிஸ், உஸ்மான் டெம்பிலி, வித்தின்ஹா ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். லெவர்குசன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் அலெக்ஸிஸ் கர்சியா பெற்றார்.
இந்நிலையில் நெதர்லாந்துக் கழகமான பி.எஸ்.வியின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-6 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலி தோல்வியடைந்தது.
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026