2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அவுஸ்திரேலிய அணியில் போலன்ட்

Shanmugan Murugavel   / 2015 டிசெம்பர் 22 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலிய, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில், பொக்ஸிங் டே-அன்று (டிசெம்பர் 26) ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய குழாமில், வேகப்பந்து வீச்சாளர் ஸ்கொட் போலன்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டியின் 12 பேர் குழாமில் இடம்பெற்றிருந்த நேதன் கோர்ட்டர் நீல், இடம்பெற்றுவரும் பிக் பாஷ் லீக் போட்டிகளில் தோட்பட்டையில் காயமடைந்துள்ளதைத் தொடர்ந்தே, தற்போது ஸ்கொட் போலன்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும், பீற்றர் சிடில், ஜொஷ் ஹேஸல்வூட், ஜேம்ஸ் பற்றின்சன் ஆகியோரில் யாருக்காவது காயம் ஏற்பட்டால் மாத்திரமே, விளையாடும் வாய்ப்பு, போலன்ட்-க்குக் கிடைக்கும்.

26 வயதான ஸ்கொட் போலன்ட், விக்டோரியா அணிக்காக, உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடிவருபவராவார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .