2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

அவுஸ்திரேலியா-மேற்கிந்தியத்தீவுகள்: மூன்றாவது நாள் கைவிடப்பட்டது

Shanmugan Murugavel   / 2016 ஜனவரி 05 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத்தீவுகள் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகின்ற நிலையில், சிட்னியில் ஆரம்பித்த 3ஆவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய முழு நாள் ஆட்டமும் மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது. கடந்த 20 வருடங்களில் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டியொன்றின் முழு நாள் ஆட்டமும் பாதிக்கப்படுவது இதுவே மூன்றாவது தடவையாகும்.

அந்தவகையில், தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணி, 7 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றுள்ளநிலையில், இப்போட்டி பெரும்பாலும் சமநிலையில் முடிவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய 4ஆம் நாள் ஆட்டத்திலும் மழை ஒன்றிரண்டு தடவைகள் குறுக்கிடும் என எதிர்வு கூறப்பட்டபோதும் ஆட்டத்தை பாதிக்காது என கூறப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .