Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையேயான, ஹோபார்ட்டில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின், இன்றைய இரண்டாம் நாள் முடிவில், தமது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி 207 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
தற்போது களத்தில், டரன் பிராவோ 94 ஓட்டங்களுடனும் கேமர் ரோச் 31 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இவர்களைத் தவிர, வேறு எவரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக சொல்லிக் கொள்ளும் படியாக ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.
பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக நேதன் லயோன் மூன்று விக்கெட்டுக்களையும் ஜோஷ் ஹெசில்வூட் இரண்டு விக்கெட்டுக்களையும் பீற்றர் சிடில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
முன்னதாக, இன்றைய நாளின் மதிய இடைவேளையின் போது, முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணியானது, நான்கு விக்கெட் இழப்புக்கு 583 ஓட்டங்களைப் பெற்றபோது தமது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக, அடம் வொஜஸ், ஆட்டமிழக்காமல் 269 ஓட்டங்களையும் ஷோர்ன் மார்ஷ் 182 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பாக ஜோமெல் வொரிக்கான் மூன்று விக்கெட்டுகளையும் ஷனோன் கப்ரியல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
25 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
7 hours ago