Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Shanmugan Murugavel / 2021 ஜனவரி 27 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்னாபிரிக்காவுக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமிலிருந்து மத்தியூ வேட் நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குழாமில் தனதிடத்தை ட்ரெவிஸ் ஹெட் தக்க வைத்துள்ளதுடன், அலெக்ஸ் காரி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் மார்க் ஸ்டெகட்டி ஆகியோரும் குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
இதேவேளை, நியூசிலாந்துக்கெதிரான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலியக் குழாமும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அறிமுக சுழற்பந்துவீச்சாளர் தன்வீர் சங்கா, வேகப்பந்துவீச்சாளர் றில்லி மெரெடித் உள்ளிட்டோர் இடம்பெற்றதோடு, பென் மக்டர்மொட், ஜஹை றிச்சர்ஸன், அஸ்தன் டேர்னர், ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப், மிற்செல் மார்ஷ் ஆகியோர் குழாமுக்குத் திரும்பியுள்ளனர்.
இ-20 ச.போ. குழாம்: ஆரோன் பின்ஞ் (அணித்தலைவர்), மத்தியூ வேட் (உப அணித்தலைவர்), அஸ்தன் அகர், ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப், கிளென் மக்ஸ்வெல், பென் மக்டர்மொற், றில்லி மெரெடித், ஜொஷ் பிலிப், ஜஹை றிச்சர்ஸன், கேன் றிச்சர்ஸன், டேனியல் சாம்ஸ், தன்வீர் சங்கா, டார்சி ஷோர்ட், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், அஸ்தன் டேணர், அன்றூ டை, அடம் ஸாம்பா.
டெஸ்ட் குழாம்: டிம் பெய்ன் (அணித்தலைவர்), பற் கமின்ஸ் (உப அணித்தலைவர்), ஷோன் அபொட், அலெக்ஸ் காரி, கமரொன் கிறீன், மார்க்கஸ் ஹரிஸ், ஜொஷ் ஹேசில்வூட், ட்ரெவிஸ் ஹெட், மொய்ஸஸ் ஹென்றிக்கஸ், மர்னுஸ் லபுஷைன், நேதன் லையன், மைக்கல் நேஸர், ஜேம்ஸ் பற்றின்ஸன், வில் புக்கொவ்ஸ்கி, ஸ்டீவ் ஸ்மித், மிற்செல் ஸ்டார்க், மார்க் ஸ்டெகெட்டி, மிற்செல் ஸ்வப்ஸன், டேவிட் வோர்னர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago