Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட ஆஷஸ் தொடரில், அடிலெய்டில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான இரண்டாவது டெஸ்டின் இன்றைய நான்காவது நாள் ஆட்ட முடிவில், இப்போட்டியில் வெற்றி பெறுவதற்காக இங்கிலாந்து போராடி வருகிறது.
தமது இரண்டாவது இனிங்ஸில், 4 விக்கெட் இழப்புக்கு 53 ஓட்டங்களைப் பெற்றவாறு இன்றைய நான்காம் நாளை ஆரம்பித்த அவுஸ்திரேலியா,138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, இங்கிலாந்து அணிக்கு வெற்றியிலக்காக 354 ஓட்டங்களை வழங்கியது. இங்கிலாந்து அணி சார்பாக, ஜேம்ஸ் அன்டர்சன் 5, கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து, இன்றைய நான்காம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அந்தவகையில், வெற்றிபெறுவதற்கு இன்னும் 178 ஓட்டங்களைப் பெற வேண்டியுள்ளது. தற்போது களத்தில், அணித்தலைவர் ஜோ றூட் 67, கிறிஸ் வோக்ஸ் ஐந்து ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது உள்ளனர். மார்க் ஸ்டோன்மன் 36, டேவிட் மலன் 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தனர். பந்துவீச்சில், மிற்செல் ஸ்டார் 2, பற் கமின்ஸ், நேதன் லயோன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, தமது முதலாவது இனிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 442 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், ஷோர்ன் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 126, டிம் பெய்ன் 57, உஸ்மான் கவாஜா 53, டேவிட் வோணர் 47, பற் கமின்ஸ் 44 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கிரேய்க் ஒவெர்ட்டன் 3, ஸ்டூவர்ட் ப்ரோட் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
முன்னதாக, இங்கிலாந்து தமது முதலாவது இனிங்ஸில் 227 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. துடுப்பாட்டத்தில், கிரேய்க் ஒவெர்ட்டன் ஆட்டமிழக்காமல் 41, அலிஸ்டியர் குக் 37, கிறிஸ் வோக்ஸ் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நேதன் லையன் 4, மிற்செல் ஸ்டார்க் 3, பற் கமின்ஸ் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
2 hours ago
2 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
19 Jul 2025