2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியாவை வீழ்த்துமா பாகிஸ்தான்

Mayu   / 2023 டிசெம்பர் 24 , பி.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது மெல்பேணில் நாளை அதிகாலை 5 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் தோல்வியடைந்த பாகிஸ்தான், தொடரைத் தக்க வைப்பதற்காவது இப்போட்டியில் கட்டாயம் தோல்வியைத் தவிர்க்க வேண்டியுள்ளது.

அந்தவகையில் பந்துவீச்சிலிருந்து ஆரம்பித்து துடுப்பாட்டம் வரையில் பாரியளவில்
முன்னேற்றத்தை பாகிஸ்தான் காண்பிக்க வேண்டியுள்ளது. ஷகீன் ஷா அஃப்ரிடியிடமிருந்து
இனிங்ஸின் ஆரம்பத்தில் விக்கெட்டுகள் எதிர்பார்க்கப்படுவதுடன், ஆமிர் ஜமால் மற்றும்
இப்போட்டியில் விளையாடுவாரென எதிர்பார்க்கப்படும் ஆமிர் ஜமால் மற்றும் சஜிட் கான்
ஆகியோர் ஓட்டங்களைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.

மறுபக்கமாக பாபர் அஸாம், அணித்தலைவர் பாபர் அஸாம், செளட் ஷகீல் ஆகியோரிடமிருந்து
ஓட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதேவேளை அவுஸ்திரேலிய அணியில் மாற்றங்களெதுவும் எதிர்பார்க்கப்படாதபோதும்
அண்மைய காலங்களில் ஓட்டங்களைப் பெறத் தடுமாறும் மர்னுஸ் லபுஷைன், ஸ்டீவன்
ஸ்மித்திடமிருந்து ஓட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X