2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அவுஸ்திரேலியாவை வென்றது தென்னாபிரிக்கா

Editorial   / 2018 மார்ச் 12 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னாபிரிக்க, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், போர்ட் எலிஸபெத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இரண்டாவது டெஸ்டில் 6 விக்கெட்டுகளால் இன்றைய நான்காவது நாளில் வென்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டேவிட் வோணர் 63, கமரோன் பான்குரோப்ட் 38, டிம் பெய்ன் 36 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கஜிஸோ றபடா 5, லுங்கி என்கிடி 3, வேர்ணன் பிலாந்தர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, சகல விக்கெட்டுகளையும் இழந்து 382 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில், ஏ.பி டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 126, டீன் எல்கர் 57, ஹஷிம் அம்லா 56, வேர்ணன் பிலாந்தர் 36, கேஷவ் மஹராஜ் 30, கஜிஸோ றபடா 29 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், பற் கமின்ஸ் 3, மிற்சல் மார்ஷ், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, 239 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், உஸ்மான் கவாஜா 75, மிற்சல் மார்ஷ் 45, டிம் பெய்ன் ஆட்டமிழக்காமல் 28, கமரோன் பான்குரோப்ட் 24 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கஜிஸோ றபடா 6, லுங்கி என்கிடி, கேஷவ் மஹராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் 101 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா, 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றியிலக்கையடைந்தது. துடுப்பாட்டத்தில், ஏ.பி டி வில்லியர்ஸ் 28, ஹஷிம் அம்லா 27, ஏய்டன் மர்க்ரம் 21, தெனியுஸ் டி ப்ரூன் ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், நேதன் லையன் 2, பற் கமின்ஸ், ஜொஷ் ஹேசில்வூட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக கஜிஸோ றபடா தெரிவானார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .