Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2022 செப்டெம்பர் 11 , பி.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இலங்கை, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் நடைபெற்றுவரும் இப்போட்டியின் இனிங்ஸின் முதலாவது ஓவரிலேயே குசல் மென்டிஸை நசீம் ஷாவிடம் இழந்த இலங்கை, பதும் நிஸங்கவையும் விரைவிலேயே ஹரிஸ் றாஃப்பிடம் பறிகொடுத்தது. தொடர்ந்து வந்த தனுஷ்க குணதிலகவும் விரைவிலேயே றாஃப்பிடம் வீழ்ந்ததுடன், 28 (21) ஓட்டங்களுடன் இஃப்திஹார் அஹ்மட்டிடம் தனஞ்சய டி சில்வாவும் சிறிது நேரத்திலேயே வீழ்ந்தார். அணித்தலைவர் தசுன் ஷானகவும் வந்த வேகத்திலேயே ஷடாப் கானிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.
பின்னர் விரைவாக ஓட்டங்களைப் பெற்ற வனிடு ஹஸரங்க 36 (21) ஓட்டங்களைப் பெற்ற நிலையில் றாஃப்பிடம் வீழ்ந்த நிலையில், பானுக ராஜபக்ஷவின் ஆட்டமிழக்காத 71 (45), சாமிக கருணாரத்னவின் ஆட்டமிழக்காத 14 (14) ஓட்டங்களுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .