Shanmugan Murugavel / 2016 மார்ச் 10 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது ஊக்கமருந்து சோதனைத் தோல்விக்கு பின்னரும் விசுவாசத்தையும் ஆதரவையும் அளித்த இரசிகர்களுக்கு, உலகின் ஏழாம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் நன்றி தெரிவித்துள்ளார்.
ஐந்து தடவை கிரான்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற இருபத்தெட்டு வயதான மரியா ஷரபோவா, கடந்த ஜனவரி மாதம், தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தான மெல்டோனியத்தை தான் பயன்படுத்தியது குறித்து அறிவிக்கப்பட்டதாக கடந்த திங்கட்கிழமை (07) வெளிப்படுத்தினார்.
இந்நிலையிலேயே, தான் நேற்றுக் காலையில் எழும்பியிருந்த வேளை, தனது இன்பொக்ஸ் ஆனாது அன்பினாலும் கருணையினாலும் முழுமையாக நிரம்பியிருந்ததாக தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்த ஷரபோவா, உங்களது சிறப்பான வார்த்தைகள், தனது முகத்தில் சிரிப்பைக் கொண்டுவந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
நான்கு வருடங்கள் வரையான தடையை எதிர்நோக்கியுள்ள ஷரபோவா, தான் மீண்டும் டென்னிஸ் விளையாடுவதில் உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் சனிக்கிழமை (11) முதல், தொழில்முறை ரீதியாக ஷரபோவா, சர்வதேச டென்னிஸ் சம்மேளனத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
21 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
1 hours ago