Editorial / 2018 பெப்ரவரி 12 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே அணிகளுக்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜாவில் இடம்பெற்றுவரும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், நேற்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் சிம்பாப்வே வென்றது.
இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே, 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 333 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், பிரென்டன் டெய்லர் 125 (121), சிகண்டர் ராசா 92 (74), ஹமில்டன் மஸகட்ஸா 48 (54) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், ரஷீட் கான் 2, முஜீப் உர் ரஹ்மான் 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.
பதிலுக்கு, 334 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான், 30.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளியும் இழந்து 179 ஓட்டங்களையே பெற்று 154 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், டவால்ட் ஸட்ரான் 47 (29), ரஹ்மட் ஷா 43 (61), மொஹமட் நபி 31 (28) ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், கிறேமி கிறீமர் 4, டென்டாய் சட்டாரா 3, பிளஸிங் முஸர்பனி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
இப்போட்டியின் நாயகனாக பிரென்டன் டெய்லர் தெரிவானார்.
29 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
5 hours ago
5 hours ago