Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 25 , மு.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
லாகூரில் இடம்பெற்று வரும் பயிற்சி முகாமில், வேகப்பந்துவீச்சாளர் மொஹமட் ஆமிர் பங்கேற்றுள்ளமை காரணமாக அதிலிருந்து பாகிஸ்தானின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் தலைவர் அசார் அலி, சிரேஷ்ட சகலதுறை வீரர் மொஹமட் ஹபீஸ் ஆகியோர் விலகியுள்ளனர்.
ஆமிர் பங்கேற்பதன் காரணமாகவே தான் விலகியிருப்பதாக அசார் அலி உறுதிப்படுத்தியுள்ளதோடு, இதே காரணத்துக்காகவே ஹபீஸும் விலகியதாக பாகிஸ்தான் அணி முகாமையாளர் அகா அக்பர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற ஸ்பொட் பிக்சிங்கில், அவரது பங்களிப்புக் காரணமாக ஐந்து வருடங்கள் தடை விதிக்கப்பட்ட ஆமிர், அதனை முடித்து தற்போது அணியில் இடம்பெறக்கூடிய வாய்ப்புக்களை கொண்டிருக்கும் நிலையிலேயே, நியூசிலாந்து தொடருக்கு முன்பதான 26 பேர் கொண்ட பயிற்சி முகாமில் இடம்பெற்றுள்ளார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago