Shanmugan Murugavel / 2016 ஜூன் 21 , மு.ப. 12:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
லெய்செஸ்டர் சிற்றி அணி இங்கிலாந்து பிறீமியர் லீக் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்து, பல்வேறு கால்பந்தாட்டக் கழகங்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஜேமி வர்டிக்கு, ஆர்சனல் கழகத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பு, அவரால் நிராகரிக்கப்படுமென நம்புவதாக, ஆர்சனலின் முகாமையாளர் ஆர்சீன் வெங்கர் தெரிவித்துள்ளார்.
வர்டியின் ஒப்பந்தத்தில் காணப்பட்ட சரத்தொன்றைப் பயன்படுத்தி, அவரை வாங்குவதற்கு ஆர்சனல் முயல்வதாக, முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.
தற்போது, இங்கிலாந்து அணிக்காக யூரோ 2016 தொடரில் விளையாடிவரும் ஜேமி வர்டி, அத்தொடரின் முடிவிலேயே தனது எதிர்காலம் குறித்து முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்துள்ள வெங்கர், 'தற்போதைய நிலையில் ஜேமி வர்டி, லெய்செஸ்டரில் உள்ளார். நான் அறிந்தவரை அவர், லெய்செஸ்டரிலேயே இருப்பார்" எனத் தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டில் 1 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்களுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஜேமி வர்டி, இப்பருவகால பிறீமியர் லீக் தொடரில், 24 கோல்களைப் பெற்று, அதிக கோல்களைப் பெற்றோரின் பட்டியலில் 2ஆவது இடத்தைப் பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago