Editorial / 2017 டிசெம்பர் 03 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று இடம்பெற்ற போட்டியொன்றில் 3-1 என்ற கோல் கணக்கில் ஆர்சனலை மன்செஸ்டர் யுனைட்டெட் வென்றது. மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாக ஜெஸி லிங்கார்ட் இரண்டு கோல்களையும் அன்டோனியோ வலென்சியா ஒரு கோலையும் பெற்றார். ஆர்சனல் சார்பாகப் பெறப்பட்ட கோலை அலெக்ஸான்ட்ரே லகஸ்ரே பெற்றார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில், நடப்பு பிறீமியர் லீக் சம்பியன்களான செல்சி, 3-1 என்ற கோல் கணக்கில் நியூகாசில் யுனைட்டெட்டை வென்றது. செல்சி சார்பாக ஈடின் ஹஸார்ட் இரண்டு கோல்களையும் அல்வரோ மொராட்டா ஒரு கோலையும் பெற்றனர். நியூகாசில் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை டுவைட் கெய்ல் பெற்றார்.
28 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
5 hours ago
5 hours ago