Editorial / 2018 மே 22 , பி.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கான 23 பேர் கொண்ட ஆர்ஜென்டீனாவின் குழாம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள குழாமில் முன்கள வீரரான மெளரோ இகார்டி இடம்பெறவில்லை.
இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் அணியின் தலைவரான மெளரோ இகார்டியே நடப்பு சீரி ஏ பருவகாலத்தில் அதிகமாக 29 கோல்களைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், லியனல் மெஸ்ஸியுடன் சேர்ஜியோ அகுரோ, கொன்ஸலோ ஹியூகைனும் லியனல் மெஸ்ஸியை ஒத்த விளையாடும்பாணியைக் கொண்ட போலோ டிபாலாவும் குறித்த குழாமில் இடம்பெற்றுள்ளனர்.
குரோஷியா, நைஜீரியா, ஐஸ்லாந்துடன் குழு டியில் இடம்பெற்றுள்ள ஆர்ஜென்டீனா, அடுத மாதம் 16ஆம் திகதி மாலை 6.30மணிக்கு இடம்பெறவுள்ள ஐஸ்லாந்துடனான போட்டியுடன் தனது உலகக் கிண்ணத் தொடரை ஆரம்பிக்கின்றது.
குழாம்:
கோல் காப்பாளர்கள்: சேர்ஜியோ றொமாரோ, வில்லி காபலெரோ, பிராங்கோ அர்மனி.
பின்கள வீரர்கள்: கப்ரியல் மெர்காடோ, பெடெரிக்கோ பஸியோ, நிக்கொலஸ் ஒட்டமென்டி, மார்கோஸ் றோஜோ, நிக்கொலஸ் டக்ளபிக்கோ, ஸ்கேவியர் மஷரானோ, மார்கோஸ் அகுனா, கிறிஸ்டியன் அன்சல்டி.
மத்தியகள வீரர்கள்: எவர் பனீகா, லூகாஸ் பிக்லியா, அஞ்சல் டி மரியா, ஜியோவனி லோ செல்ஸோ, மனுவல் லன்ஸினி, கிறிஸ்டியன் பவோன், மக்ஸ்மில்லியானோ மெஸா, எடுவார்டோ சல்வியோ.
முன்கள வீரர்கள்: லியனல் மெஸ்ஸி, கொன்ஸலோ ஹியூகைன், போலோ டிபாலா, சேர்ஜியோ அகுரோ.
6 minute ago
13 minute ago
48 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
13 minute ago
48 minute ago
59 minute ago