2025 மே 19, திங்கட்கிழமை

ஆறுதல் வெற்றி பெறுமா மே. தீவுகள்?

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 27 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கிந்தியத் தீவுகள், இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது ட்ரினிடாட்டில் இன்றிரவு இலங்கை நேரப்படி 7 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிளிலும் வென்று ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றியுள்ள இந்தியா, இப்போட்டியில் குழாமிலுள்ள ஏனைய முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடாத இஷன் கிஷன், ருத்துராஜ் கைகவாட், அர்ஷ்டீப் சிங்க் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இந்திய குழாமில் இடம்பெறுவதற்கு சஞ்சு சாம்ஸன் தொடர்ச்சியான குறிப்பிடத்தக்க இனிங்ஸ்களை ஆட வேண்டியுள்ளதுடன், அணியில் தொடருவதற்கு ஷ்ரேயாஸ் ஐயரும் பெரிய இனிங்ஸ்களை ஆட வேண்டியுள்ளது. தவிர, சூரியகுமார் யாதவ்வும் பெரிய இனிங்ஸொன்றை ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் ஆட வேண்டியதாகக் காணப்படுகிறது.

மறுபக்கமாக, மேற்கிந்தியத் தீவுகளின் குழாமிலுள்ள கேசி கார்ட்டியை ஷமராஹ் ப்ரூக்ஸ் அல்லது பிரண்டன் கிங்குக்காகக் களமிறக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X