Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 28 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், பல்லேகலவில் நடைபெற்று வரும் இலங்கைக்கெதிரான குழு இரண்டு சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் இலங்கை முதலில் களத்தடுப்பிலீடுபடுகிறது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கையணியின் தலைவர் தசுன் ஷானக, தமதணி முதலில் களத்தடுப்பிலீடுபடுமென அறிவித்தார்.
இலங்கையணியில் காயம் காரணமாக குசல் மென்டிஸ் விளையாடியிருக்காத நிலையில் அவரை கமில் மிஷார பிரதியிட்டதுடன், சுழற்பந்துவீச்சாளர் டுஷான் ஹேமந்தவை வேகப்பந்துவீச்சு சகலதுறைவீரர் ஜனித் லியனகே பிரதியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் கடைசிப் போட்டியில் விளையாடிய பாபர் அஸாம், சைம் அயூப், சல்மான் மிர்ஸாவை கவாஜா நஃபே, நசீம் ஷா, அப்ரார் அஹ்மட் ஆகியோர் பிரதியிட்டிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .