Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 13 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் தற்போது முடிவுக்கு வந்த அவுஸ்திரேலியாவுக்கெதிரான குழு பி போட்டியில் சிம்பாப்வே வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட சிம்பாப்வே, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத 64 (56), தடிவனஷே மருமனியின் 35 (21), றயான் பேர்ளின் 35 (30), அணித்தலைவர் சிகண்டர் ராசாவின் ஆட்டமிழக்காத 25 (13) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் கமரன் கிறீன் 1.1-0-6-1, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 2.5 -0-17-1, அடம் ஸாம்பா 4-0-31-0, மத்தியூ கூனுமென் 3-0-24-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
பதிலுக்கு 170 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, பிளெஸிங்க் முஸர்பனி (4), பிரட் இவான்ஸ் (3), றயான் பேர்ள், வெலிங்டன் மஸகட்ஸாவிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களையே பெற்று 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. மற் றென்ஷோ 65 (44), கிளென் மக்ஸ்வெல் 31 (32), ஹெட் 17 (15) ஓட்டங்களைப் பெற்றனர்.
இப்போட்டியின் நாயகனாக முஸர்பனி தெரிவானார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago