Shanmugan Murugavel / 2026 மார்ச் 08 , பி.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் ஞாயிற்றுக்கிழமை (08) சம்பியனானதன் மூலம் பல முதற் தடவைகளை இந்தியா நிகழ்த்தியிருக்கிறது.
இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் மூன்று தடவைகள் சம்பியனான முதல் அணியாக தனது பெயரை இந்தியா பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து ஆகியன தலா இரண்டு தடவைகள் சம்பியனாகியிருந்தன.
இதேவேளை இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்தை தக்க வைத்த முதலாவது அணியாகவும் தமது பெயரை இந்திய அணி பதிவு செய்து கொண்டது.
இதுதவிர இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்தை நடத்திய நாடு சம்பியனாகிய முதற் தடவையாகவும் இம்முறை பதிவானது.
இதேவேளை இருபதுக்கு – 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் நாணயச் சுழற்சியில் தோற்று சம்பியனாகிய முதல் அணியாகவும் இந்தியா தமது பெயரைப் பதிவு செய்து கொண்டது.
இதை விட இருபதுக்கு – 20 உலகக் கிண்ண வரலாற்றில் இதற்கு முதல் நியூசிலாந்தை 2016, 2021-இல் சந்தித்த இந்தியா அப்போது தோற்றிருந்த நிலையில் இம்முறை இறுதிப் போட்டியிலேயே இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்துக்கெதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
5 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago