Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 12 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், மும்பையில் தற்போது முடிவுக்கு வந்த நேபாளத்துக்கெதிரான குழு சி போட்டியில் இத்தாலி வென்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட நேபாளம், அலி ஹஸன், கிறிஷன் கலுகமகே (3), ஜெ.ஜெ. ஸ்மட்ஸ், பென் மனென்டி (2), ஜஸ்பிறீட் சிங்கிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களையே பெற்றது. ஆரிஃப் ஷெய்க் 27 (24), அணித்தலைவர் றோஹித் பெளடெல் 23 (14), ஆசிஃப் ஷெய்க் 20 (20), கரன் கே.சி ஆட்டமிழக்காமல் 18 (11), டிபேந்திர சிங் ஐரீ 17 (18) ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு 124 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இத்தாலி, அந்தனி மொஸ்காவின் ஆட்டமிழக்காத 62 (32), ஜஸ்டின் மொஸ்காவின் ஆட்டமிழக்காத 60 (44) ஓட்டங்களோடு 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது. பந்துவீச்சில் டிபேந்திர சிங் ஐரீ 3.4-0-24-0, குஷான் புர்டெல் 2-0-15-0 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தனர்.
இப்போட்டியின் நாயகனாக கிறிஷன் கலுகமகே தெரிவானார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago