2025 ஜூலை 05, சனிக்கிழமை

இங்கிலாந்து பிறீமியர் லீக்: ஆர்சனலை வென்றது லிவர்பூல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் லிவர்பூலை ஆர்சனல் வென்றது.

இப்போட்டியின் ஆரம்பத்தில் ஆர்சனல் முன்னிலை பெறும் வாய்ப்பைக் கொண்டிருந்தபோதும் அதன் முன்களவீரரான நிக்கலஸ் பெப்பே, லிவர்பூலின் பின்களவீரர்கள் எவருமில்லாத நிலையில் லிவர்பூலின் கோல் காப்பாளர் அட்ரியனிடம் நேரடியாகப் பந்தைச் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில், சக பின்களவீரரான ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்டின் மூலையுதையை போட்டியின் 41ஆவது நிமிடத்தில் தலையால் முட்டிக் கோலாக்கிய லிவர்பூலின் இன்னொரு பின்களவீரரான ஜோயல் மட்டிப் தனதணிக்கு முன்னிலையை வழங்கினார்.

தொடர்ந்து போட்டியின் 49ஆவது நிமிடத்தில் லிவர்பூலின் முன்களவீரரான மொஹமட் சாலாவை, தமது பெனால்டி பகுதிக்குள் வைத்து ஆர்சனலின் பின்களவீரரான டேவிட் லூயிஸ் வீழ்த்திய நிலையில் வழங்கப்பட்ட பெனால்டியை மொஹமட் சாலா கோலாக்கியதோடு, அடுத்த ஒன்பதாவது நிமிடத்தில் டேவிட் லூயிஸின் தவறினால் மேலுமொரு கோலைப் பெற்றார்.

இந்நிலையில், மாற்றுவீரராகக் களமிறங்கிய ஆர்சனலின் மத்தியகளவீரரான லூகாஸ் டொரெய்ரா, போட்டியின் 85ஆவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்ற நிலையில் இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வென்றது.

இதேவேளை, தமது மைதானத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கிறிஸ்டல் பலஸுடனான போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்றிருந்தது. கிறிஸ்டல் பலஸ் சார்பாக, ஜோர்டான் அயூ, பற்றிக் வான் ஆன்ஹொல்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், மன்செஸ்டர் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை டேனியல் ஜேம்ஸ் பெற்றிருந்தார். இப்போட்டியில் கிடைக்கைப் பெற்ற பெனால்டியொன்றை கோலாக்க மன்செஸ்டர் யுனைட்டெட்டின் முன்களவீரர் மார்க்கஸ் றஷ்ஃபோர்ட் தவறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நோர்விச் சிற்றி அணியின் மைதானத்தில் நேற்று  இடம்பெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் செல்சி வென்றிருந்தது. செல்சி சார்பாக, தம்மி ஏப்ரஹாம் இரண்டு கோல்களையும் மேஸன் மெளன்ட் ஒரு கோலையும் பெற்றனர். நோர்விச் சிற்றி சார்பாக, டொட் கன்ட்வெல், டீமு புக்கி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

இதேவேளை, ஷெஃபீல்ட் யுனைட்டெட் அணியின் மைதானத்தில் நேற்று  நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிற்றி வென்றிருந்தது. லெய்செஸ்டர் சிற்றி சார்பாக, ஜேமி வார்டி, ஹார்வி பார்ண்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர். ஷெஃபீல்ட் யுனைட்டெட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஒலிவர் மக்புர்னி பெற்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .