2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இங்கிலாந்தை வெல்லுமா நியூசிலாந்து?

Shanmugan Murugavel   / 2023 பெப்ரவரி 23 , பி.ப. 01:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வெலிங்டனில் நாளை அதிகாலை 3.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில், தொடரைச் சமப்படுத்துவதற்கு துடுப்பாட்டத்தில் பலத்தளவு முன்னேற்றத்தை நியூசிலாந்து காண்பிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக சிரேஷ்ட வீரர்களான டொம் லேதம், கேன் வில்லியம்ஸன், ஹென்றி நிக்கொல்ஸிடமிருந்து பெரிய இனிங்ஸ்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. பந்துவீச்சுப் பக்கம் ஸ்கொட் குக்லஜினுக்குப் பதிலாக குழாமுக்குத் திரும்பியுள்ள மற் ஹென்றி விளையாடக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

மறுபக்கமாக அதேயணியே இங்கிலாந்து சார்பாக களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றபோதும் ஒரு வேகப்பந்துவீச்சாளருக்காக ஒலி ஸ்டோன் களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

தவிர ஜொனி பெயார்ஸ்டோ காயத்திலிருந்து குணமடைந்து வருகையில் நேரடியாக அணிக்கு வருவார் என்ற நிலையில், ஸக் குறொலி உள்ளிட்டோர் விரைவாக தொடர்ச்சியாக பெறுபேறுகளைப் பெறுவது அவசியமாகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X