Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Shanmugan Murugavel / 2020 ஒக்டோபர் 18 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், இன்டர் மிலன் மற்றும் ஏ.சி மிலனின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலனை ஏ.சி மிலன் வென்றது.
ஏ.சி மிலன் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் ஸல்டான் இப்ராஹிமோவிச் பெற்றிருந்தார். இன்டர் மிலன் சார்பாகப் பெறப்பட்ட கோலை றொமெலு லுக்காக்கு பெற்றிருந்தார்.
இதேவேளை, கொர்த்துன்னேயின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் ஜுவென்டஸ், கொர்த்துனேக்கிடையேயான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது. ஜுவென்டஸ் சார்பாகப் பெறப்பட்ட கோலை அல்வரோ மொராட்டா பெற்றதோடு, குரொத்தொன்னே சார்பாகப் பெறப்பட்ட கோலை சிமி பெற்றிருந்தார்.
இந்நிலையில், சம்ப்டோரியாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற லேஸியோ, சம்ப்டோயாவுக்கிடையேயான போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் லேஸியோ தோல்வியடைந்தது. சம்ப்டோரியா சார்பாக, பபியோ குவாக்லியரெல்லா, டொம்மாஸோ அகுவெல்லோ, மிக்கேல் தம்ஸ்கார்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.
இதேவேளை, நாப்போலியின் மைதானத்தில் நடைபெற்ற நாப்போலி, அத்லாண்டாவுக்கிடையிலான போட்டியில் 4-1 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது. நாப்போலி சார்பாக, ஹிர்விங் லொஸானோ இரண்டு கோல்களையும், மத்தேயோ பொலிட்டானோ, விக்டர் ஒசிம்ஹென் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை சாம் லம்மேர்ஸ் பெற்றிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .