Shanmugan Murugavel / 2016 மார்ச் 16 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற, உலக இருபதுக்கு-20 தொடரின் முதலாவது போட்டியில், இந்திய அணியின் துடுப்பாட்டமே அவ்வணிக்கு எதிராக அமைந்ததாக, அவ்வணியின் தலைவர் மகேந்திரசிங் டோணி தெரிவித்தார்.
இந்திய அணிக்குச் சாதகமாக அமையுமென எதிர்பார்க்கப்பட்ட ஆடுகளத்தில், அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான டிம் சௌதி, ட்ரென்ட் போல்ட், மிற்சல் மக்லநகன் ஆகியோரை விலக்கி, மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்தியாவைப் புரட்டியெடுத்திருந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், பதிலளித்தாடிய இந்திய அணி, 18.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 79 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 47 ஓட்டங்களால் தோல்வியடைந்திருந்தது. மிற்சல் சான்ட்னெர் 4, இஷ் சோதி 3, நேதன் மக்கலம் 2 என விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தனர்.
தோல்வி குறித்துக் கருத்துத் தெரிவித்த டோணி, 'துடுப்பாட்டம் எங்களைக் கைவிட்டது. மென்மையான ஆட்டமிழப்புகள் பல இருந்தன. ஆடுகள நிலைமைகளை அவர்கள் சிறப்பாக எடுத்து, சிறப்பாகப் பந்துவீசியிருந்தார்கள். ஆனால் நாம் இயைபாக விளையாடியிருக்கவில்லை" என்றார்.
வெற்றி குறித்துக் கருத்துத் தெரிவித்த கேன் வில்லியம்ஸன், அணியின் பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய விதம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ட்ரென்ட் போல்ட்டையும் டிம் சௌதியையும் அணியிலிருந்து விலக்கும் முடிவு கடினமானதாக இருந்ததாகத் தெரிவித்த அவர், ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசியிருந்ததாகத் தெரிவித்தார்.
ஆண்களின் உலக இருபதுக்கு-20 தொடர் ஆரம்பித்த நாளிலேயே, பெண்களின் உலக இருபதுக்கு-20 தொடரும் ஆரம்பித்திருந்த நிலையில், முதல்நாள் போட்டிகளில் பங்களாதேஷ் அணியை இந்தியாவும், இலங்கை அணியை நியூசிலாந்தும் தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
20 minute ago
1 hours ago