Shanmugan Murugavel / 2016 ஜனவரி 04 , மு.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, இந்திய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 13 பேர் கொண்ட கொண்ட குழாமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழாமில், அவுஸ்திரேலிய சிரேஷ்ட வீரர்களான நேதன் லையன், ஷேன் வொற்சன் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.
குழாமில் சுழற்பந்து வீச்சாளராக, சகலதுறை வீரரான கிளென் மக்ஸ்வெல் மாத்திரமே இடம்பெற, வேகப்பந்து வீசும் சகலதுறை வீரர்களாக மிற்சல் மார்ஷ், ஜேம்ஸ் போக்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எனினும், இக்குழாமில் இவர்களிருவரும் சேர்க்கப்படாததன் காரணமாக, இடம்பெற்றுவரும் பிக் பாஷ் லீக் தொடரில் பங்குபற்றும் வாய்ப்புக் கிடைப்பதோடு, இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில் இடம்பெறும் வாய்ப்பும் கிடைக்கக்கூடும்.
குழாம்: டேவிட் வோணர், ஆரொன் பின்ச், ஸ்டீவன் ஸ்மிம், ஷோன் மார்ஷ், ஜோர்ஜ் பெய்லி, கிளென் மக்ஸ்வெல், மிற்சல் மார்ஷ், மத்தியூ வேட், ஜேம்ஸ் போக்னர், கேன் றிச்சர்ட்ஸன், ஜொஷ் ஹேஸல்வூட், ஸ்கொட் போலன்ட், ஜோயல் பரிஸ்.
23 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
7 hours ago