Shanmugan Murugavel / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியன் சுப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், சென்னையின் கால்பந்தாட்டக் கழகம், சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கோவா கால்பந்தாட்டக் கழகத்தைத் தோற்கடித்தே அவ்வணி, சம்பியன் பட்டம் வென்றது.
இப்போட்டியின் முதற்பாதியில், எந்தக் கோல்களும் பெற்றுக் கொள்ளப்படாத நிலையில், இரண்டாவது பாதி, மிக விறுவிறுப்பானதாக அமைந்தது.
போட்டியின் 54ஆவது நிமிடத்தில், சென்னையின் சார்பாக முதலாவது கோலை, பெலிசரி பெற்றுக் கொடுத்தார். ஆனால், நான்கு நிமிடங்களில், கோவாவின் ஹாவோகிப், கோலொன்றைப் பெற்று, கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார். தொடர்ந்து விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியில், 87ஆவது நிமிடத்தில் கோவாவின் ஜொப்றி பெற்றுக் கொடுத்த கோலினால், அவ்வணிக்கு 2-1 என்ற முன்னிலை கிடைத்தது.
எனினும், போட்டியின் இறுதி நேரத்தில், கோவா அணியின் லக்ஷ்மிகாந்த் கட்டிமனியில் பட்டு, பந்து கோல் கம்பத்துக்குள் செல்ல, ஒவ்ண் கோலானது. இதனால், 2-2 என கோல் எண்ணிக்கை சமமானது. பின்னர், சென்னையின் அணியின் ஜோன் ஸ்டிவென் மென்டோஸா, மற்றுமொரு கோலைப் பெற்று, சென்னையின் அணிக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.
போட்டியின் சிறந்த வீரராக, ஜொப்றி தெரிவானார்.
இப்போட்டியின் மத்தியஸ்தர்கள், சென்னையின் அணிக்குச் சார்பாகச் செயற்பட்டதாகக் கூறி, இறுதிநேரப் பரிசளிப்பு நிகழ்வை, கோவா அணியினர் புறக்கணித்திருந்தனர். அத்தோடு, போட்டி முடிவில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில், கோவா அணியின் உரிமையாளரைத் தாக்கிய குற்றத்துக்காக, சென்னையின் அணியின் தலைவரும் பிரேஸிலைச் சேர்ந்தவருமான எலனோ புளூமர், போட்டி முடிவடைந்ததும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago