Editorial / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய அணி, கடந்த 4, 5 ஆண்டுகளில் இருபதுக்கு 20 போட்டிகளில் மோசமாகச் செயறபட்டது நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் தான் என்றும் இதற்குமுன்னர், இவ்வாறு மோசமாக விளையாடிப் பார்த்ததில்லை என்றும் இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கங்குலி பேட்டி அளி்த்த போதே இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் மேலும் கூறியதாவது,
நேர்மையாகக் கூறினால், கடந்த 2017, 2019ஆம் ஆண்டுகளில் அதாவது சாம்பியன்ஸ் கிண்ணம், இங்கிலாந்தில் நடந்த உலகக் கிண்ணம் ஆகியவற்றில் இந்திய அணி சிறப்பாகத்தான் செயற்பட்டது.
சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் ஓவல் மைதானத்தில் தோற்றோம். 2019ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இடம்பெற்ற உலகக் கிண்ண போட்டியில் அனைத்து அணிகளையும் தோற்கடித்து அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்றோம் 2 மாதங்களாக உழைத்தது வீணாகிப்போனது.
ஆனால், இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய அணி விளையாடிய விதம் என்னை மிகவும் வேதனைப் படுத்தியது. நான் கடந்த 4 முதல் 5 ஆண்டுகளில் பார்த்தவரையில் இந்திய அணி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் விளையாடியதுதான் மோசமானது என நினைக்கிறேன்.
என்ன காரணம் என்று எனக்குத் தெரியாது. ஆனால், போதுமான சுதந்திரத்துடன் இந்த உலகக் கிண்ணப் போட்டியில் இந்திய வீரர்கள் விளையாடவில்லை என நான் நினைக்கிறேன்.
சில நேரங்களில் பெரிய போட்டித் தொடரில் இதுபோன்று நடக்கலாம். நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக இடம்பெற்ற போட்டிகளில் இந்த சூழலைப் பார்த்தேன்.
இந்திய அணியினர், அவர்களின் திறமையில் 15 சதவீதத்தை மட்டுமே வெளிப்படுத்தி விளையாடினர். இதனால்தான் இப்படி நடந்தது என்று சில நேரங்களில் ஏதாவது ஒரு காரணத்தை காட்டி சொல்லிவிட முடியாது என்றார்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026