2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

இந்தியா, பாகிஸ்தானுக்கு சவால் இருக்குமா?

Shanmugan Murugavel   / 2022 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

- முருகவேல் சண்முகன்

ஆசியக் கிண்ணத் தொடரானது நாளை ஆரம்பிக்கின்ற நிலையில், நேற்றைய பத்தியில் குழு பியிலுள்ள அணிகளைப் பற்றி நோக்கியிருந்த நிலையில் இன்றைய பத்தியில் குழு ஏயிலுள்ள அணிகளைப் பற்றி நோக்குவோம்.

குழு ஏயில் நடப்புச் சம்பியன்களான இந்தியாவும், பாகிஸ்தானும், தற்போது தகுதிகாண் போட்டிகளிலிருந்து தகுதி பெற்றுள்ள ஹொங் கொங்கும் காணப்படுகின்றது.

இந்நிலையில், சுப்பர் 4 சுற்றுக்கு இந்தியாவும், பாகிஸ்தானுமே தகுதிபெறும் என்பது வெள்ளிடைமடையாகக் காணப்படுகின்றது. எவ்வாறாயினும் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளைப் பொறுத்தவரையிலேயே குட்டி அணிகள் அதிர்ச்சியளிக்கக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் தமது பிரதான வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவை காயம் காரணமாக இழந்தமையானது அவ்வணிக்கு பின்னடைவாகவே காணப்படுகின்றது. எனினும், புவ்னேஷ்வர் குமார், ஹர்டிக் பாண்டியா, அர்ஷ்டீப் சிங் கூட்டணியானது எந்நிலைமைகளையும் சமாளிக்கக்கூடியதாகவே காணப்படுகின்றது.

சுழற்பந்துவீச்சுப் பக்கமும் யுஸ்வேந்திர சஹால், இரவிச்சந்திரன் அஷ்வின், இரவீந்திர ஜடேஜா, ரவி பிஷ்னோய் எனப் பலமானதாகவே காணப்படுகின்றது. துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் நட்சத்திரப் பட்டாளம் காணப்படுகின்றபோதும் ஒன்று சேர்ந்த பெறுபேறுகள் இல்லாமை, விராட் கோலி ஓட்டங்களைப் பெறத் தடுமாறுகின்றமை, லோகேஷ் ராகுல் நீண்ட கால இடைவெளியின் பின்னர் விளையாடுகின்றமையானது இந்தியா கவனஞ் செலுத்த வேண்டிய விடயங்களாகக் காணப்படுகின்றது.

குழாம்: றோஹித் ஷர்மா (அணித்தலைவர்), லோகேஷ் ராகுல் (உப அணித்தலைவர்), அர்ஷ்டீப் சிங், இரவிச்சந்திரன் அஷ்வின், ஆவேஷ் கான், யுஸ்வேந்திர சஹால், தீபக் ஹூடா, இரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், விராட் கோலி, புவ்னேஷ்வர் குமார், ஹர்டிக் பாண்டியா, றிஷப் பண்ட், ரவி பிஷ்னோய், சூரியகுமார் யாதவ்.

இந்நிலையில், பாகிஸ்தானும் இந்தியாவுக்கு சவாலளிக்கக் கூடிய வகையில் காணப்படுகின்றபோதும், அவ்வணியும் தமது முதன்மை வேகப்பந்துவீச்சாளர் ஷகீன் ஷா அஃப்ரிடியை காயம் காரணமாக இழந்தமையால் ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுகளை வேறொரு பந்துவீச்சாளர் கைப்பற்ற வேண்டியுள்ளது.

அணித்தலைவர் பாபர் அஸாம், மொஹமட் றிஸ்வான் ஆகியோர் இனிங்ஸை நகர்த்திச் செல்லக் கூடியவர்களாகக் காணப்படுவதுடன், பக்கர் ஸமன், ஆசிஃப் அலி, ஹைதர் அலி, குஷ்டில் ஷா, இஃப்திஹார் அஹ்மட் என அதிரடியான துடுப்பாட்டவீரர்களுடன், ஷடாப் கான், மொஹமட் நவாஸ் என அதிரடி சகலதுறைவீரர்களுடன் அச்சுறுத்தும் அணியாகவே பாகிஸ்தான் காணப்படுகின்றது.

தவிர, வேகப்பந்துவீச்சுப் பக்கமும் ஹரிஸ் றாஃப், நசீம் ஷா, மொஹமட் வாசிம், மொஹமட் ஹஸ்னைன் என சவாளிக்கக்கூடிய வரிசையே அஃப்ரிடி இல்லாத பட்சத்திலும் காணப்படுகின்றது.

குழாம்: பாபர் அஸாம் (அணித்தலைவர்), ஷடாப் கான் (உப அணித்தலைவர்), ஆசிஃப் அலி, பக்கர் ஸமன், ஹைதர் அலி, ஹரிஸ் றாஃப், இஃப்திஹார் அஹ்மட், குஷ்டில் ஷா, மொஹமட் நவாஸ், மொஹமட் றிஸ்வான், மொஹமட் வாஸிம், நசீம் ஷா, மொஹமட் நவாஸ், ஷஹ்னவாஸ் டஹானி, உஸ்மான் குவாதிர்.

ஹொங் கொங்கைப் பொறுத்த வரையில் அவ்வணியின் முதல் மூன்று வீரர்களான யசிம் முர்டாஸா, அணித்தலைவர் நிஸகட் கான், பாபர் ஹயாட் ஆகியோரே அவ்வணிக்கு ஓட்டங்களைப் பெற்று சவாலளிக்கக்கூடிய ஓட்டங்களை அவ்வணி அடைவதற்கு உதவுகின்றனர். ஆக, இவர்களின் பெறுபேறுகளிலேயே ஹொங் கொங்கின் பெறுபேறுகள் தங்கியுள்ளன.

குழாம்: நிஸகட் கான் (அணித்தலைவர்), அஃப்தாப் ஹுஸைன், அஸியஸ் கான், அதீப் இக்பால், பாபர் ஹயாட், தனஞ்சய் றாவோ, எஹஸன் கான், ஹரூன் அர்ஷாட், ஸ்கொட் மக்கெச்னி, மொஹம்மட் கஸன்ஃபார், மொஹமட் வாஹீட், கின்ஷிட் ஷா, ஆயூஷ் சுக்லா, அஹன் ட்ரிவேடி, வஜிட் ஷா, யசிம் முர்டஸா, ஸீஷன் அலி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X