Shanmugan Murugavel / 2023 பெப்ரவரி 16 , பி.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்திய, அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டெல்லியில் நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.
நான்கு போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை இலகுவாக இந்தியா வென்ற நிலையில், இந்தியாவுக்கு சவாலளிக்க வேண்டுமாயின் துடுப்பாட்டம், பந்துவீச்சில் பலத்த முன்னேற்றத்தை அவுஸ்திரேலியா காண்பிக்க வேண்டியுள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில் சூரியகுமார் யாதவ்வை ஷ்ரேயாஸ் ஐயர் பிரதியிடுவதோடு, லோகேஷ் ராகுலுக்கான இறுதி வாய்ப்பாக இப்போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் போர்முடனுள்ள ஷுப்மன் கில் அணிக்கு வெளியே காணப்படுகிறார்.
மறுபக்கமாக அவுஸ்திரேலியாவைப் பொறுத்த வரையில் மிற்செல் ஸ்டார்க், கமரொன் கிறீன் ஆகியோர் பூரண உடற்றகுதியை அடையாத அணியில் அதேயணியே களமிறங்கும் வாய்ப்புகள் காணப்படுகின்றன. மற் றென்ஷோவை ட்ரெவிஸ் ஹெட் பிரதியிடுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
1 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
24 Jan 2026