Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 05 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், டெல்லியில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமான மூன்றாவது டெஸ்டின் இன்றைய நான்காவது நாள் முடிவில் இலங்கையணி தடுமாறி வருகிறது.
தமது முதலாவது இனிங்ஸில், 9 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்களைப் பெற்றவாறு இன்றைய நான்காம் நாளை ஆரம்பித்த இலங்கையணி, 373 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில், அணித்தலைவர் தினேஷ் சந்திமால் 164, அஞ்சலோ மத்தியூஸ் 111, டில்ருவான் பெரேரா 42, சதீர சமரவிக்கிரம 33 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், இரவிச்சந்திரன் அஷ்வின், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 3, இரவீந்திர ஜடேஜா, மொஹமட் ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அந்தவகையில், முதலாவது இனிங்ஸ் மூலம் பெற்ற 163 ஓட்டங்கள் முன்னிலையுடன் தமது இரண்டவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 246 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தி, 410 ஓட்டங்களை இலங்கையணிக்கு வெற்றியிலக்காக வழங்கியது. துடுப்பாட்டத்தில், ஷீகர் தவான் 67, ரோகித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 50, அணித்தலைவர் விராத் கோலி 50, செட்டேஸ்வர் புஜாரா 49 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லஹிரு கமகே, சுரங்க லக்மால், டில்ருவான் பெரேரா, லக்ஷன் சந்தகான், தனஞய டி சில்வா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
இதையடுத்து, தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கையணி, இன்றைய நான்காவது நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக முடிவுக்கு வரும்போது 31 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தற்போது தனஞ்சய டி சில்வா 13 ஓட்டங்களுடனும் அஞ்சலோ மத்தியூஸ் ஓட்டமெதனையும் பெறாமலும் களத்திலுள்ளனர். பந்துவீச்சில், இரவீந்திர ஜடேஜா 2, மொஹமட் ஷமி ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா, தமது முதலாவது இனிங்ஸில், 7 விக்கெட்டுகளை இழந்து 536 ஓட்டங்களைப் பெற்றபோது தமது ஆட்டத்தை இடைநிறுத்தியது. துடுப்பாட்டத்தில், விராட் கோலி 243, முரளி விஜய் 155 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில், லக்ஷான் சந்தகான் 4, லஹிரு கமகே 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்
2 hours ago
2 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
19 Jul 2025