Editorial / 2020 பெப்ரவரி 24 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டை நியூசிலாந்து வென்றுள்ளது.
வெலிங்டனில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பித்த இரண்டு அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்த முதலாவது டெஸ்டின் இன்றைய நான்காம் நாளை தமது இரண்டாவது இனிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களைப் பெற்றவாறு ஆரம்பித்த இந்தியா, எஞ்சிய விக்கெட்டுகளை ட்ரெண்ட் போல்ட், டிம் செளதியிடம் பறிகொடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களையே பெற்றது.
இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸில் ஒன்பது ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கையடைந்தது.
இப்போட்டியின் நாயகனாக டிம் செளதி தெரிவானார்.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
இந்தியா: 165/10 (துடுப்பாட்டம்: அஜின்கியா ரஹானே 46, மாயங்க் அகர்வால் 34 ஓட்டங்கள். பந்துவீச்சு: கைல் ஜேமிஸன் 4/39, டிம் செளதி 4/49, ட்ரெண்ட் போல்ட் 1/57)
நியூசிலாந்து: 348/10 (துடுப்பாட்டம்: கேன் வில்லியம்சன் 89, றொஸ் டெய்லர் 44, கைல் ஜேமிஸன் 44, கொலின் டி கிரான்ட்ஹொம் 43, ட்ரெண்ட் போல்ட் 38, டொம் பிளன்டல் 30 ஓட்டங்கள். பந்துவீச்சு: இஷாந்த் ஷர்மா 5/68, இரவிச்சந்திரன் அஷ்வின் 3/99, ஜஸ்பிரிட் பும்ரா 1/88, மொஹமட் ஷமி 1/91)
இந்தியா: 191/10 (துடுப்பாட்டம்: மாயங்க் அகர்வால் 58, அஜின்கியா ரஹானே 29, றிஷப் பண்ட் 25 ஓட்டங்கள். பந்துவீச்சு: டிம் செளதி 5/61, ட்ரெண்ட் போல்ட் 4/39, கொலின் டி கிரான்ட்ஹொம் 1/28)
நியூசிலாந்து: 9/0
போட்டியின் நாயகன்: டிம் செளதி
43 minute ago
49 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
49 minute ago
3 hours ago