Shanmugan Murugavel / 2016 ஜூன் 20 , மு.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் காணப்படும் மிகப்பழைமையான டென்னிஸ் தொடர்களில் ஒன்றான இராணிக் கிண்ணத்தின் ஒற்றையர் போட்டிகளின் சம்பியன் பட்டத்தை வென்ற பிரித்தானியாவின் அன்டி மரே, அந்தத் தொடரில் சாதனை படைத்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்தவரும் உலகின் 7ஆம் நிலை வீரருமான மிலோஸ் றாவோனிக்கை எதிர்கொண்ட அன்டி மரே, 6-7 (5-7), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்றுச் சம்பியனானார்.
முதலாவது செட்டைக் கைப்பற்றிய றாவோனிக், இரண்டாவது செட்டில் 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை வகித்திருந்தார். எனவே, சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு அவருக்கு 3 புள்ளிகளே தேவைப்பட்ட போதிலும், சிறந்த மீள்வருகையைப் புரிந்த அன்டி மரே, அந்த செட்டையும் அடுத்த செட்டையும் கைப்பற்றி, சம்பியனானார்.
இதன்படி, இராணிக் கழகக் கிண்ணத்தில் ஒற்றையர் போட்டிகளில் 5 தடவைகள் வென்ற முதலாமவர் என்ற சாதனையை, அன்டி மரே படைத்தார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago