2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

இரண்டாவது டெஸ்டில் பின்தங்கியுள்ள மேற்கிந்தியத் தீவுகள்

Shanmugan Murugavel   / 2025 டிசெம்பர் 11 , பி.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது நாள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் பின்தங்கியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த நிலையில், வெலிங்டனில் புதன்கிழமை (10) ஆரம்பித்த இப்போட்டியின் இன்றைய இரண்டாம் நாளை தமது விக்கெட் இழப்பின்றி 24 ஓட்டங்களுடன் ஆரம்பித்த நியூசிலாந்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 278 ஓட்டங்களைப் பெற்றது. மிற்செல் ஹே 61, டெவொன் கொன்வே 60 ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் அன்டர்சன் பிலிப் 3, கேமார் றோச் 2, அணித்தலைவர் றொஸ்டன் சேஸ், ஜஸ்டின் கிறேவ்ஸ், ஒஜே ஷீல்ட்ஸ், ஜேடன் சியல்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு தமது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் மேற்கிந்தியத் தீவுகள், இன்றைய இரண்டாம் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. களத்தில் பிரெண்டன் கிங் 15 ஓட்டங்களுடனும், கவெம் ஹொட்ஜ் மூன்று ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் காணப்படுகின்றனர். மைக்கல் றே, ஜேக்கப் டஃபி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

முதலாம் நாளில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், தமது முதலாவது இனிங்ஸில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X