Shanmugan Murugavel / 2025 ஒக்டோபர் 23 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு பாகிஸ்தானின் நொமன் அலி முன்னேறியுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே ஆறாமிடத்திலிருந்து நான்கு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இங்கிலாந்தின் அடில் ரஷீட், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆறாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றியதுடன், இரண்டாவது போட்டியில் 32 ஓட்டங்களைப் பெற்ற பங்களாதேஷின் மெஹிடி ஹஸன் மிராஸ், சகலதுறை வீரர்களுக்கான தரவரிசையில் ஐந்தாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி நான்காமிடத்தையடைந்துள்ளார்.
முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இதேவேளை, பங்களாதேஷுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 53 ஓட்டங்களைப் பெற்ற மேற்கிந்தியத் தீவுகளின் ஷாய் ஹோப், துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் 10ஆம் இடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார்.
முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,
இந்நிலையில் இந்தியாவுக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் ஜொஷ் ஹேசில்வூட், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 16ஆம் இடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்தை அடைந்துள்ளார்.
முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
05 Feb 2026
05 Feb 2026
05 Feb 2026