2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இரண்டாமிடத்துக்கு முன்னேறிய ஹஸரங்க

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 28 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இலங்கையின் வனிடு ஹஸரங்க முன்னேறியுள்ளார்.

இந்தியாவுக்கெதிரான முதலாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை ஹஸரங்க அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. தப்ரையாஸ் ஷம்சி, 2. வனிடு ஹஸரங்க, 3. ரஷீட் கான், 4. அடில் ரஷீட், 5. முஜீப் உர் ரஹ்மான், 6. டிம் செளதி, 7. அடம் ஸாம்பா, 8. அஸ்தன் அகர், 9. இஷ் சோதி, 10. பேபியன் அலென்.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. டேவிட் மலன், 2. பாபர் அஸாம், 3. ஆரோன் பின்ஞ், 4. டெவோன் கொன்வே, 5. விராட் கோலி, 6. லோகேஷ் ராகுல், 7. மொஹமட் றிஸ்வான், 8. எவின் லூயிஸ், 9. மார்டின் கப்தில், 10. றஸி வான் டர் டுஸன்.

முதல் ஐந்து சகலதுறைவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. மொஹமட் நபி, 2. ஷகிப் அல் ஹஸன், 3. றிச்சர்ட் பெரிங்டன், 4. கிளென் மக்ஸ்வெல், 5. கவார் அலி.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜொஷ் ஹேசில்வூட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில், ஏழாமிடத்திலிருந்து ஐந்து இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தை அடைந்துள்ளார்.

இதே தொடரில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க், 18ஆம் இடத்திலிருந்து 10 இடங்கள் முன்னேறி எட்டாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ட்ரெண்ட் போல்ட், 2. ஜொஷ் ஹேசில்வூட், 3. முஜீப் உர் ரஹ்மான், 4. கிறிஸ் வோக்ஸ், 5. மெஹிடி ஹஸன் மிராஸ், 6. மற் ஹென்றி, 7. ஜஸ்பிரிட் பும்ரா, 8. மிற்செல் ஸ்டார்க், 9. ஷகிப் அல் ஹஸன், 10. ககிஸோ றபாடா.

முதல் 10 துடுப்பாட்டவீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. பாபர் அஸாம், 2. விராட் கோலி, 3. ரோஹித் ஷர்மா, 4. றொஸ் டெய்லர், 5. ஆரோன் பின்ஞ், 6. ஜொனி பெயார்ஸ்டோ, 7. டேவிட் வோணர், 8. குயின்டன் டி கொக், ஷே ஹோப், 10. கேன் வில்லியம்ஸன்.

முதல் ஐந்து சகலதுறை வீரர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. ஷகிப் அல் ஹஸன், 2. மொஹமட் நபி, 3. கிறிஸ் வோக்ஸ், 4. ரஷீட் கான், 5. மிற்செல் சான்ட்னெர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .