2025 மே 19, திங்கட்கிழமை

இரண்டாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை

Shanmugan Murugavel   / 2022 ஜூலை 10 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை முன்னிலையில் காணப்படுகின்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட இத்தொடரில், காலியில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த டெஸ்டில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டமிழக்காத 145, மர்னுஸ் லபுஷைனின் 104 ஓட்டங்களோடு சகல விக்கெட்டுகளையும் இழந்து தமது முதலாவது இனிங்ஸில் 364 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில், டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட பிரபாத் ஜெயசூரிய 6, கசுன் ராஜித 2, ரமேஷ் மென்டிஸ் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட இன்னொருவரான மகேஷ் தீக்‌ஷன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பதிலுக்கு, தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை இன்றைய மூன்றாம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 431 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. தற்போது களத்தில், தினேஷ் சந்திமால் 118 ஓட்டங்களுடனும், ரமேஷ் மென்டிஸ் ஏழு ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர். முன்னதாக, அணித்தலைவர் திமுத் கருணாரத்ன 86, குசல் மென்டிஸ் 85, டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்ட கமிந்து மென்டிஸ் 61, அஞ்சலோ மத்தியூஸ் 52 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில், மிற்செல் ஸ்டார்க் 2, மிற்செல் ஸ்வப்ஸன் 2, நேதன் லையன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X