2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இருபதுக்கு 20 போட்டியில் அணிகள் பெற்ற பரிசுத்தொகை

Editorial   / 2022 நவம்பர் 14 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று, ஞாயிறுக்கிழமையுடன் (13) நிறைவடைந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண ஆண்களுக்கான போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி,  உலகக்கிண்ணத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.

கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உட்பட பலரும் இங்கிலாந்து அணிக்கு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வெற்றி பெற்ற இங்கிலாந்து அணிக்கு பரிசு தொகையாக 1.72 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி 92 இலட்சம் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இருபது ஓவர் உலகக்கிண்ண போட்டியில் பங்கு பெற்ற அணிகள் பெற்ற பரிசு தொகை விவரம் வருமாறு:-

  •  அரையிறுதி ஆட்டம்

இந்தியா- 560,000 அமெரிக்க டொலர்

நியூஸிலாந்து-  520,000 அமெரிக்க டொலர்

  •  குழு 1 சுப்பர் 12 சுற்று

அவுஸ்திலேரியா- 190,000 அமெரிக்க டொலர்

இலங்கை- 230,000 அமெரிக்க டொலர்

அயர்லாந்து -190,000 அமெரிக்க டொலர்

ஆப்கானிஸ்தான்- 190,000 ​அமெரிக்க டொலர்

  • குழு 2 சுப்பர் 12 சுற்று

தென்னாபிரிக்கா- 150,000 அமெரிக்க டொலர்

நெதர்லாந்து- 230,000 அமெரிக்க டொலர்

பங்களாதேஷ்- 150,000 அமெரிக்க டொலர்

சிம்பாபே- 190,000 அமெரிக்க டொலர்

 

  •  முதலாவது சுற்று

நமீபியா- 80,000 அமெரிக்க டொலர்

ஐக்கிய அமீரகம்- 80,000 அமெரிக்க டொலர்

ஸ்கொட்லாந்து- 80,000 அமெரிக்க டொலர்

மேற்கிந்திய தீவுகள்-80,000 அமெரிக்க டொலர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .